உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., துண்டு பிரசுரம்

அ.தி.மு.க., துண்டு பிரசுரம்

வேடசந்துார்,; வேடசந்துாரில் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்தும் ,உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வேடசந்துார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து நோட்டீஸ் வழங்கியப்படி ஊர்வலமாக சென்று பஸ் ஸ்டாண்ட் ஆத்து மேட்டில் முடித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரதி முருகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் தண்டபாணி, பேரூர் ஜெ பேரவை செயலாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை