உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

அ.தி.மு.க., தெருமுனை பிரசாரம்

கன்னிவாடி : ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கன்னிவாடியில் தெருமுனை பிரசாரம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். மாநில ஜெ., பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்., கண்ணன் துவக்கி வைத்து பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஏராளமான நலத்திட்டங்களை, தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. வீடு, சொத்து, குடிநீர் வரி, மின்சார கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான ரூபாயில் முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர் ''என்றார். ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் சின்னு முன்னிலை வகித்தார்.ரெட்டியார்சத்திரம் ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் மயில்வாகனன்,மீனவரணி இணை செயலாளர் சின்னையா, துணை செயலாளர் நல்லமுத்து, எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி மகேந்திரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் செந்தில்முருகன், தண்டபாணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை