உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூஞ்சோலை சென்ற அகரம் முத்தாலம்மன்; பக்தர்கள் பரவசம்

பூஞ்சோலை சென்ற அகரம் முத்தாலம்மன்; பக்தர்கள் பரவசம்

திண்டுக்கல், : அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு எழுந்தருளிய நிலையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திண்டுக்கல் தாடிக்கொம்பையடுத்த அகரத்தில் பழமையான முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்துவதற்கு முத்தாலம்மனிடம் உத்தரவு கேட்பது வழக்கம். கவுளி சத்த சகுனம் வழியாக அம்மனின் உத்தரவு கிடைத்ததால் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின. அதன்படி திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி அக். 14ல் நடைப்பெற்றது.இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவிற்கான கங்கணம் கட்டி விரதம் இருந்து வந்தனர்.திருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் உற்ஸவர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாள்தோறும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கண்திறப்பு நேற்று முன்தினம் நடந்தது. மேள தாள வாத்தியங்கள் முழங்க சகல நாத ஆராதனைகளுடன் அம்மனின் திருவுருவத்தில் திரை நீக்க கண் திறப்பு மண்டபத்தில் கண் திறப்பு நடந்தது.இதை தொடர்ந்து அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார். அதன் பின் அன்று நள்ளிரவு புஷ்ப விமானத்தில் உலா வந்த அம்மன் வான காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் பாரம்பரிய முறைப்படி பெண்கள் மாவிளக்கு போட்டு அம்மனை வழிபட்டனர். விடிய விடிய வாணவேடிக்கைகளும் நடைபெற்றன.இதன் பின் நேற்று பொதுமக்களுக்குஅருள்பாலித்த அகரம் முத்தாலம்மன் மதியம் சொருகு பட்டை சப்பரத்தில் எழுந்தருள பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி பூஞ்சோலை சென்றார். வழியில் மண்டகப் படிகளில் எழுந்தருளி அருள் பாலித்த அம்மன் பூஞ்சோலையை வந்தடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை