உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

தி.மு.க.,வில் மாற்றுக்கட்சியினர்

நத்தம்: நத்தம் அரசு திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம், தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், தொகுதி பொறுப்பாளர் ரஞ்சன்துரை முன்னிலை வகித்தனர். வத்திபட்டி, பரளி, நத்தம் பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க, தமிழர்தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினை சேர்ந்த 50-க்கு மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !