ஆம்புலன்ஸ் வழங்கும் விழா
நத்தம் : நத்தத்தில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான இலவச ஆம்புலன்ஸ் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட பொருளாளர் சில்லிசேட் தலைமை வகித்தார். நகர தலைவர் ஹபிபுல்லா, பொருளாளர் முகமது உசேன் முன்னிலை வகித்தனர். இதை மாநில தலைவர் ஹைதர்அலி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து பஸ் ஸ்டாண்ட், தர்பார் நகர் பகுதிகளில் கொடி ஏற்றப்பட்டது.