உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கால்நடை பராமரிப்பு பயிற்சி

 கால்நடை பராமரிப்பு பயிற்சி

நிலக்கோட்டை: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப பயிற்சி திட்டம், கால்நடை சமீபத்திய முன்னேற்பாடுகள் நவீனதொழில் நுட்பம் குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் மண்டல இணை இயக்குனர் டாக்டர் விஷ்ணுகாந்தன் தலைமையில் நடந்தது. டாக்டர் நுார் முகமது முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் ஆறுமுகராஜ் வரவேற்றார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உதவி பேராசிரியர் தாஸ் பிரகாஷ் பேசினார். விவசாயிகளுக்கு சிறப்பு கையேடு, கால்நடை மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர்கள் ஆரோக்கியராபர்ட், தினேஷ்பாபு அனிதா, முன்னாள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கணேசன், தும்மலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை