உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

திண்டுக்கல் : தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது . குரலிசை,பரத நாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.அச்யுதா பப்ளிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவி சனாதனா குரலிசை போட்டியில் மாவட்ட அளவில் , இதே வகுப்பை சேர்ந்த மாணவி ஹிமானிபுத்ரி பரத நாட்டியப் போட்டியில் முதலிடம் பெற்றார். இருவரும் மாநில போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றனர். இவர்களை பள்ளி செயலாளர்கள் மங்கள்ராம்,காயத்ரி மங்கள்ராம், முதன்மை முதல்வர் சந்திர சேகரன், ஞானப்பிரியதர்ஷினி,வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, மகேஷ்வரி, விஜயசாந்தி, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை