மாணவர்களுக்கு பாராட்டு
பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஈரோட்டில் நடந்த பொது அறிவுப்போட்டி, திருக்குறள் போட்டித்தேர்வில் பங்கேற்றனர். இதில் மாணவன் ருத்ரேஷ் முதலிடம், மாணவி அன்புமதி மூன்றாம் இடம் பெற்றனர். மாணவன் வெற்றிதிருச்செழியன், பெரியகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா இருவரும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கத்தை வழங்கினார். மாணவர்களை ஊக்குவித்த தலைமை ஆசிரியர் மல்லிகாவிற்கு சான்றிதழ் வழங்கினார்.