உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

கன்னிவாடி: தருமத்துப்பட்டி டி.எம்.பி., நர்சரி துவக்கப்பள்ளி மாணவர்கள், மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம் சார்பில் பழநியில் நடத்தப்பட்ட 39வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றனர். 41 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், சாதனை புரிந்து பரிசுக் கோப்பை, சான்றிதழ்களை வென்றனர். இதற்கான பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. தாளாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். வென்ற மாணவர்களை பாராட்டி பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைத்த ஆசிரியர்கள் பிரியா ஜோஸ்பினா, சுதிமேரி, திவ்யா, மாஸ்டர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பாராட்டுப் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !