உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தி.மு.க., உருவாக்கிய பினாமி தான் த.வெ.க., சொல்கிறார் அர்ஜூன் சம்பத்

 தி.மு.க., உருவாக்கிய பினாமி தான் த.வெ.க., சொல்கிறார் அர்ஜூன் சம்பத்

திண்டுக்கல்: ''தி.மு.க., உருவாக்கிய பினாமி கட்சி தான் த.வெ.க., தி.மு.க., கொள்கைகளை மட்டுமே பின்பற்றி வரும் த.வெ.க., தலைவர் விஜய் மற்றொரு கமலாகவே இருப்பார்,'' என, திண்டுக்கல்லில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: டில்லியில் கார் வெடிப்பு மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் படித்தவர்கள், மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறு வயது முதலே மதரசாக்களில் வழங்கப்படும் கல்வியே இந்த நிலைக்கு காரணம். நாடுமுழுவதும் மத வெறி ஊட்டும் மதரசா கல்வி நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அங்கு அரசு பாடங்களை கற்றுவிக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்துார் ராணுவ நடவடிக்கை முடிந்து விடவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அதை தொடர்ந்து நடத்தி பயங்கரவாதிகளின் வேரையும், பயிற்சி முகாம்களையும் கண்டறிந்து முறியடிக்க வேண்டும். உள்நாட்டிலும் ஆப்பரேஷன் சிந்துார் நடத்த வேண்டும். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மே 17 அமைப்பினர் உள்ளிட்டோர் வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரதமர் மோடிக்கு எதிரான பிரசாரம் இல்லை. இந்தியாவிற்கு எதிரான பிரசாரம். இவர்களின் நிலைபாடு சிறுபான்மையினர் ஆதரவு அல்ல. இந்திய வெறுப்பின் அடிப்படையில் செயல்படும் இந்த கட்சிகள், அமைப்புகள் குறித்து தேசிய புலனாய்வு முகாமை விசாரிக்க வேண்டும். பயங்கரவாதிகளை துாண்டி விடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் காரணமாக பல மாணவர்களுக்கு தமிழ் மொழியில் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இதனால் அங்கு ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. சபரிமலையில் ஆந்திர, கர்நாடக அரசுகள் சார்பில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் தமிழக பக்தர்கள் தங்க கட்டட வசதியை ஏற்படுத்திக்கொடுக்க தமிழக அரசு முன் வர வேண்டும். கேரளத்துக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்கான கையெழுத்து இயக்கத்தை ஹிந்து மக்கள் கட்சி கார்த்திகை முதல் தேதி துவக்குகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி