உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆஷா பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே தமிழ்நாடு ஆஷா பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாதந்தோறும் வழங்கும் ரூ.7,500 ஊதியத்தை ரூ.26,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணியின் போது இறப்பு நிகழ்ந்தால் ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டும். பத்தாண்டுகள் பணிபுரிந்த ஆஷா பணியாளர்களை கிராம சுகாதார செவிலியரராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் ஜானகி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பேராசிரியர் மோகனா, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜெயசீலன் பங்கேற்று பேசினர். சங்க பொதுச்செயலாளர் செல்வி, மாநில நிர்வாகிகள் மரகதம், பிச்சையம்மாள் உள்ளிட்ட உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் கலெக்டரிடம் மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை