உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆள் மாறாட்டம் செய்து நிலம் அபகரிக்க முயற்சி

ஆள் மாறாட்டம் செய்து நிலம் அபகரிக்க முயற்சி

கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை பதிவு செய்ய முயன்றவர்கள் போலீசில் ஓப்படைக்கப்பட்டனர்.கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் தனியார் லே அவுட்டில் 6 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள காலி மனையை சிங்கப்பூரில் வசிக்கும் ராமச்சந்திரன் 1995ல் கிரையம் பெற்றுள்ளார். தற்போது அந்த சொத்து மதுரையில் வசிக்கும் ராமச்சந்திரன் வசம் இருப்பதாக தெரிவித்து அதை மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு கிரையம் கொடுக்க ஆவணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சார் பதிவாளர் ராஜேஷ் பிரபு ஆவணம், அடையாள அட்டைகளை சரி பார்த்து ஆதார் கார்டை ஆய்வு செய்த போது ராமச்சந்திரனுக்கு பதில் ஜானகிராமன் என இருந்தது. இதையடுத்து அலுவலக உதவியாளர் ஆள்மாறாட்டம் செய்த ராமச்சந்திரனை கையொப்பமிட அழைத்த போது தயங்கினார். உடன் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்ததால் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து ஆவண முறைகேடு அரங்கேற்றி நிலத்தை அபகரிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக சார் பதிவாளர் கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். ஆள்மாறாட்டம் செய்தவர், உடன் வந்தவர்கள், கார் டிரைவர் உட்பட 6 பேர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரனை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை