உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொலை முயற்சி : ஒருவர் கைது

கொலை முயற்சி : ஒருவர் கைது

நெய்க்காரப்பட்டி கே.வேலுார் பகுதியில் டீக்கடையில் நின்ற டிரைவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற விவசாய தொழிலாளி கைது செய்யப்பட்டார். கே.வேலுார் மண்டுகாளியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் ஆக்டிங் டிரைவர் கணேசன் 45. இவர் விவசாய கூலி வேலையும் செய்து வருகிறார். இவர் நேற்று காலை கே.வேலுார் பகுதி டீக்கடையில் நின்றார். அங்கு வந்த காவலப்பட்டி அருகே உள்ள முள்ளிசெட் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சின்னகாளை 32, அரிவாளால் கணேசனை வெட்டினார். காயமடைந்த கணேசனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னக்காளையை பழநி தாலுகா போலீசார் கைது செய்தனர். சின்னகாளையின் மனைவியுடன் கணேசன் தொடர்பில் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த சின்னகாளை கணேசனை வெட்டியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ