உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து திருத்திய அரசாணை வெளியிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். செயலாளர் சுகந்தி, மாநில செயலாளர் ஜெஸ்ஸி கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஏராளமானோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். பொருளாளர் மகாலிங்கம் நன்றி தெரிவித்தார். பின் நிர்வாகிகள் கலெக்டர் துர்காவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ