ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்லதுரை 27. வடக்கு ரத வீதி டாஸ்மாக் கடை அருகே சவாரிக்காக காத்திருந்தார். அங்கு வந்த 3பேர் முத்தழகுப்பட்டி செல்வதாக கூறி ஏறினர். முத்தழகுபட்டி, சென்றதும் மூவரும் ஆட்டோ டிரைவரை தாக்கி அலைபேசி ரூ.8 ஆயிரத்தை பறித்ததுடன் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். வடக்கு போலீசார் சி.சி.டி.வி., கேமரா பதிவுப்படி பணம் பறித்த லோடுமேன்களான காமராஜர்புரத்தை சேர்ந்த குமார் 25, ராஜபாண்டி 37, பித்தளைப்பட்டியை சேர்ந்த அருண்குமார் 36, ஆகியோரை கைது செய்தனர்.