உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆயக்குடி கோவில் மண்டபம் மழையால் இடிந்து விழுந்தது

ஆயக்குடி கோவில் மண்டபம் மழையால் இடிந்து விழுந்தது

ஆயக்குடி : பழனி, பழைய ஆயக்குடியில், 1352ல், அப்போதைய ஆயக்குடி மன்னர் பெரியஓபளகொண்டம நாயக்கரால், அகோபிலேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் பரம்பரை அறங்காவலராக ஜெயந்தி ஸ்ரீதர் உள்ளார். கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.தற்போது, பெய்த மழையால் கோவில் முன்மண்டபம் இடிந்து விழுந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இதன் சீரமைப்பு பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில், மண்டபம் சரிசெய்யும் பணிகள் துவங்கும் என, பொறுப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ