உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / த.வெ.க., நிர்வாகிக்கு ஜாமின்

த.வெ.க., நிர்வாகிக்கு ஜாமின்

திண்டுக்கல் : கரூர் சம்பவத்தில் நீதிபதி, தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு கைதான திண்டுக்கல் மாவட்ட த.வெ.க.,நிர்வாகிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. திண்டுக்கல் த.வெ.க., தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் 29. கரூர் சம்பவம் குறித்து சமூகவலைத்தளத்தில் தமிழக முதல்வர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி செல்வக்குமார் சாணார்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இதைதொடர்ந்து நிர்மல்குமாரை போலீசார் கைதுசெய்தனர். அக்.,24 வரை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு திண்டுக்கல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 3 நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து நிர்மல்குமாருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி