உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உயிர் பலியை தடுக்க தலையூற்று அருவியில் குளிக்க தடை விதியுங்க

உயிர் பலியை தடுக்க தலையூற்று அருவியில் குளிக்க தடை விதியுங்க

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி தலையூற்று அருவியில் குளிக்கும்போது நீரில் மூழ்கியும், சுழலில் சிக்கியும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அருவியில் குளிக்க தடை விதிக்க வேண்டும்.ஒட்டன்சத்திரம் வடகாடு மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சிறிது துாரத்தில் மேல்தலையூற்று அருவியாக உருவெடுத்து நங்காஞ்சி ஆறு வழியாக கீழ்தலையூற்று அருவிக்கு செல்கிறது. மேல் , கீழ் தலையூற்று அருவிகளில் குளிப்பவர்கள் சுழலில் சிக்கியும் ஆழமான பகுதிக்கு சென்றும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரிக்கிறது. ஆபத்தான இடங்களுக்கு சென்று நீரில் மூழ்கி இறப்பது அடிக்கடி நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு கீழ்தலையூற்று அருவியில் குளிக்க சென்றவர் சுழலில் மாட்டி இறந்தார். இதேபோல் மேல் தலையூற்றுப் பகுதியிலும் சுழலில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து அதிகமானோர் இங்கு குளிக்க வருகின்றனர். அருவியின் தன்மை குறித்து சரிவர தெரியாமல் வனத்துறையினரின் எச்சரிக்கை அறிவிப்புகளையும் மீறி ஆபத்தான இடங்களில் குளித்து சிக்கிக் கொள்கின்றனர். தலையூற்று அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ