மேலும் செய்திகள்
ரூ. 65 லட்சத்தில் பணிகள் பண்ருட்டியில் பூமி பூஜை
14-Jul-2025
வேடசந்தூர், : வேடசந்தூர் எம்.எல்.ஏ., காந்திராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.87 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடத்தினார். ஸ்ரீ ராமபுரம் ஊராட்சி மொடக்காற்று கருப்பணசாமி கோயில் மண்டபத்திற்கு ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, மாத்தினிபட்டி பிரிவில் ரூ.10 லட்சம் மதிப்பில் சோலார் விளக்குடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடை, மேல்மாத்தினிபட்டியில் ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக காத்திருப்போர் கூட கட்டிடம் உள்ளிட்ட ரூ.87 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிரியம் நடராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கவிதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், வழக்கறிஞர் லோகநாதன் பங்கேற்றனர்.
14-Jul-2025