உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சைக்கிள் வழங்கும் விழா

 சைக்கிள் வழங்கும் விழா

வடமதுரை: வடமதுரை அரசு ஆண்கள், பெண்கள், அய்யலுார் மேல்நிலைப்பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 696 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை காந்திராஜன் எம்.எல்.ஏ., வழங்கினார். பேரூராட்சி தலைவர்கள் நிருபாராணிகணேசன், கருப்பன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் காந்திமதி, கணேஷ்வதி, விநாயகம் வரவேற்றனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன், அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன, துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முரளிராஜன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, பேரூராட்சி கவுன்சிலர்கள் சவுந்தர்ராஜ், சுப்பிரமணி, மகேஸ்வரி, விஜயா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை