உள்ளூர் செய்திகள்

பிறந்த நாள் விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில், காமராஜர் சிலை பூங்கா வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவாவின் 142வது பிறந்த நாள் விழா, கொடி காத்த திருப்பூர் குமரனின் 122வது பிறந்த நாள் விழா நடந்தது. மாவட்டத் தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கவுரவ ஆலோசகர் டால்டன் சுதந்திரப் போராட்ட வீரர்களின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தார். நிர்வாகி சஞ்சய்குமார், 'சுதந்திரம்' என்ற தலைப்பில் பேசினார். அறக்கட்டளையின் தலைவர் நடராஜன் பொது மக்களுக்கு இனிப்புக்கள் வழங்கினார். செல்வம், மாரியப்பன், கார்த்தி, மகேந்திரன், வடிவேல்முருகன் மலர் துாவி மரியாதை செலுத்தினர். ஏற்பாடுகளை மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை