பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம்
எரியோடு: வேடசந்துார் சட்டசபை தொகுதி அளவிலான பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் எரியோட்டில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் வள்ளிநடராஜன் வரவேற்றார். கிழக்கு ஒன்றிய தலைவர் முத்துச்செல்விமீனாட்சிசுந்தரம், பொது செயலாளர் ஐயப்பன் பங்கேற்றனர். 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைய ஒவ்வொரு தேர்தல் பூத்திலும் நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.