பா.ஜ.,வினர் கைது
வடமதுரை: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரில் குமரன் குன்று கோயில் இடிப்பு சம்பவத்தை கண்டித்தும், அங்கு பார்வையிட சென்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைதை கண்டித்தும் அய்யலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், பா.ஜ., மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் நிலவளன் உட்பட 20 பேரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.