பா.ஜ., ஆர்ப்பாட்டம்..
திண்டுக்கல்: காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மண்டல் தலைவர் முருகேசன் வரவேற்றார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசினார்.மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலர்கள் முத்துக்குமார், சபாபதி, மண்டல் தலைவர் ராம்கண்ணன், முன்னாள் கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் தனபாலன் பங்கேற்றனர்.*வடமதுரையில் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தலைவர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ரவிபாலா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், சரவணன், கலைமணி, சண்முகம், செல்லமுத்து, பிரபு, பெருமாள், வீரப்பன், தர்மராஜ் பங்கேற்றனர்.