உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தொழிலாளிக்கு பாட்டில் குத்து

தொழிலாளிக்கு பாட்டில் குத்து

திண்டுக்கல் ': குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி டொமினிக் ஸ்டீபன் 29 . அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் அமல் ராஜய்யா, ஜாண்சன் உடன் டாஸ்மாக் கடையில் மதுகுடித்தார். அங்கு திண்டுக்கல் அணைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரபாண்டியன், ஜெயராமன், மாசிலாமணி மதுகுடித்தனர். இவர்கள் டேபிளில் இருந்த மதுபாட்டில் டொமினிக் ஸ்டீபன் தட்டியதில் கீழே விழுந்து உடைந்தது. இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதில் மதுபாட்டிலால் டொமினிக் ஸ்டீபனை மார்பு, முதுகில் ஈஸ்வரபாண்டியன் குத்தினார். உடன் வந்த அமல்ராஜய்யா, ஜாண்சனையும் தாக்கினர். ஈஸ்வரபாண்டியன், மாசிலாமணி இருவரை தாலுகா போலீசார் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை