கொத்தனார் தற்கொலை
ஒட்டன்சத்திரம்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காப்பார்பட்டியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள் 35. மனைவி ராணி மற்றும் இரண்டு மகன்களுடன் ஒட்டன்சத்திரம் காந்திநகர் செக்குமேடு பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட சேவுகபெருமாள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.