உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

 ஒருங்கிணைப்பாளர்  பணிகளுக்கு அழைப்பு

திண்டுக்கல்: கலெக்டர் சரவணன் செய்தி குறிப்பு : ஆத்துார், வத்தலக்குண்டு உட்பட 14 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு பிப்.16க்குள் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு துறையில் பட்டம் , 3 மாதங்கள் எம்.எஸ்., ஆபீஸ் கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 30 வயது உட்பட்டவர்கள் சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். காலிப் பணியிடம் உள்ள வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல்- 624 004 க்கு பிப்.16 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு 0451- - 2460 050 ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை