உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரசார வாகனம் தொடக்கம்

பிரசார வாகனம் தொடக்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் என்.எஸ்.வி. ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை இருவார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட மருத்துவம் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் பூமிநாதன், துணை இயக்குநர்( கவுசல்யாதேவி, மக்கள் கல்வி தகவல் அலுவலர் மானெக் ஷா, இளநிலை நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, அலுவலகக் கண்காணிப்பாளர் ஆரோக்கியபாப்புலெட், புள்ளிவிபர உதவியாளர் பிரபு பங்கேற்றார்.இருவார விழாவையொட்டி ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை,பழநி அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் நவ. 28 முதல் டிச.4 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !