உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரயிலில் கஞ்சா பறிமுதல்

 ரயிலில் கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல்: மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் 8.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை திண்டுக்கல் வந்த புருலியா எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனையிட்டனர். ரயில் பொதுப்பெட்டியில் இருக்கைக்கு அடியில் இருந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் 8.3 கிலோ கஞ்சா இருந்தது. கடத்தியவர்கள் பிடிபடவில்லை. இதையடுத்து ரயில்வே ஸ்டேஷன்களில் பதிவான சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ