உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கம்பளத்து நாயக்கர் ஆர்ப்பாட்டம்

 கம்பளத்து நாயக்கர் ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: வடமதுரை மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் அப்பாவு நாயக்கர் 42. இவர் மீது வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் பி.சி.ஆர்., (வன்கொடுமை) வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை கண்டித்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் வேடசந்துாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு தலைவர் செல்லகாமு, கோப்பாநாயகர், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட தலைவர் லக்கனன், ெயல் தலைவர் மகேஷ், செயலாளர் காட்டுராஜா, இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி