உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழாய் கசிவால் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

குழாய் கசிவால் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

வேடசந்துார்: கரூர் காவிரி ஆற்றிலிருந்து ராட்சத குழாய்கள் வழியாக வேடசந்துார் பேரூராட்சி ,தட்டாரப்பட்டி, நத்தப்பட்டி, பாலப்பட்டி, கூவக்காபட்டி ஊராட்சி பகுதிகளுக்கு வெரியம்பட்டி ஜம்ப் மூலம் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குழாய் பாதையில் கரூர் உப்பிடமங்கலம், வெள்ளியணை, பாளையம் பகுதிகளில் நீர் கசிவால் தண்ணீர் வீணாகிறது. இதைத் தொடர்ந்து குழாய் பாதையை சீரமைக்கும் பொருட்டு இரு நாட்களாக காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு குழாய் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காவிரி திட்டப் பணியாளர் பாலமுருகன் கூறுகையில்,'' வழியிடை பகுதியில் குழாய் மராமத்து பணிகள் நடப்பதால் இரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !