உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம்

 சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம்

பழநி: பழநி சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் 6 ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது. தலைவர் ஊர்கால மூர்த்தி தலைமை வகித்தார். இதில் அறநிலைத்துறை சார்பில் பல்கலை அமைக்க வேண்டும். மாதம்தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தைப் போல் வணிகர்களுக்கும் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திண்டுக்கல் டெல்டா பிராண்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் செந்தில்குமார், திருப்பூர் வாவிபாளையம் தொழிலதிபர் அனந்தகிருஷ்ணன், உடுமலை தமிழிசைச் சங்கம் செயலாளர் சண்முகசுந்தரம், கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், இயக்குனர் கவிதாசன், பழநி சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் சந்திரசேகரன், பொருளாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர். வளாகத்தில் வணிகர்கள் பலர் ஸ்டால்கள் அமைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ