உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுவனை கடத்தியவர் கைது

சிறுவனை கடத்தியவர் கைது

நத்தம் : நத்தம செந்துறை- பழனிபட்டியை சேர்ந்தவர் கலையரசன் 26. இவரது மகன் ஹரிஹரன் 6. பழனிபட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வார். சிறுவனை,அடைக்கனுாரை சேர்ந்த மனோகர் 19,என்பவர் சில நாட்களாகவே பின் தொடர்ந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனை மனோகர், மிரட்டி தனது டூவீலரில் கடத்தி சென்று சிரங்காட்டுபட்டிக்கு செல்லும் மலைப்பாதையில் மறைத்து வைத்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி அடைக்கனுார் பகுதியில் பதுங்கிய மனோகரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ