அரசு ஊழியர்கள் போராட்டம்
திண்டுக்கல்: தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இதற்கு மாவட்டத் தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். மாவட்ட இணைச்செயலர் ராசாத்தி வரவேற்றார். நகர தொழிற்சங்க இணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.