கொடைக்கானலில் தரை இறங்கிய மேகக்கூட்டம்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தரையிறங்கிய மேக கூட்டத்திற்கு இடையே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கொடைக்கானலில் சில நாட்களுக்கு முன் கன மழை கொட்டி தீர்த்தது. இதை தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் நேற்று காலை வெயில் பளிச்சிட்ட நிலையில் அவ்வப்போது சாரல் மழையும் நீடித்தது. இந்த இதமான சூழலை பயணிகள் ரசித்தனர். மேலும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளுகுளு சூழல் நிலவியது. தாண்டிக்குடி கீழ் மலைப்பகுதியில் மிதமான மழையும் பெய்தது.