நடிகை கஸ்துாரி மீது புகார்
திண்டுக்கல்: நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின் முறை பாதுகாப்பு இயக்கம் சார்பில் எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது.சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்துாரி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவர் பேசிய கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனிடையே தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின் முறை பாதுகாப்பு இயக்க திண்டுக்கல் மாவட்ட கவுரவத் தலைவர்கள் ஆனந்த், விஜயக்குமார் தலைமையில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மனுவில், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசிய கஸ்துாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.