உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வி.ஏ.ஓ.,க்கு மிரட்டல் நடவடிக்கைக்கு புகார்

 வி.ஏ.ஓ.,க்கு மிரட்டல் நடவடிக்கைக்கு புகார்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வி.ஏ.ஓ., வாக குறிஞ்சி நகரை சேர்ந்த சிவராஜ் பணியாற்றுகிறார். தேனி மாவட்டத்தை சேர்ந்த சிபிராஜ் ஒட்டன்சத்திரம் நகராட்சி நாகணம்பட்டியில் உள்ள நிலம் ஒன்றில் தனது பெயரை கூட்டாக சேர்க்க வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். நிலத்தை கள ஆய்வு செய்த சிவராஜ் தாசில்தாரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். நாகணம்பட்டியை சேர்ந்த கண்ணன், கோபி ஆகியோர் அலைபேசியில் தொடர்பு கொண்டு சாதகமாக அறிக்கை கொடுக்க கூறி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பகுதி வி.ஏ.ஓ., க்கள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் கிளைத் தலைவர் வரதராஜ் தலைமையில் டி.எஸ்.பி., யிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். கிராம நிர்வாக உதவியாளர் சங்கத்தினரும் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை