உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமரச விழிப்புணர்வு பேரணி

சமரச விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட சமரச தீர்வு மையம், மாவட்ட நீதிமன்றம் சார்பில் 'தேசத்தின் சமரசம் 3.0' என்ற தலைப்பில் சமரச விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி பத்மநாபன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வழக்கில் இருதரப்பும் வெற்றி பெறுவதற்கான அறிவார்ந்த வழி சமரசம். மன அமைதிக்கு வழி பேசி தீர்ப்பதே புத்திசாலித்தனம். நிம்மதியான வாழ்வை நேசிப்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் துவங்கிய பேரணி மாவட்ட விளையாட்டு மைதானம், புறவழிச்சாலை வழியே கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தனியார் சட்டக் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பேரணியில் மாவட்ட சமரச தீர்வு மைய தலைவர் சொர்ணம் ராஜகோபால், ஒருங்கிணைப்பாளர் நீதிபதி இன்பகார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை