உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

கட்டுமான தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் கீழ் இயங்கும் உழைக்கும் பெண்கள் பேரவை மாவட்டக்குழு கூட்டம் போக்குவரத்து தொழிலாளர் சங்க கட்டடத்தில் இன்று (நவ.,22) நடந்தது. வினோதினி தலைமை வகித்தார். சகாய ஜெனிபர் வரவேற்றார். புஷ்பம், சகாயராணி மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். துணைப் பொதுச் செயலாளர் தங்கமோகன், சி.ஐ.டி.யு., மாநிலக் குழு உறுப்பினர் மோகனா, மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். பணப் பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும், பணியிட பாலியல் புகார் தெரிவிக்க புகார் பெட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் பாலசுப்ரமணியம், பாலச்சந்திர போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !