உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மாவட்டத்தில் தொடர் மழை

 மாவட்டத்தில் தொடர் மழை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. விட்டு, விட்டு தொடர் மழை பெய்தது. இடைஇடையே வெயில் தலைக்காட்டினாலும் நாள் முழுவதும், குளிர்ந்த கால நிலையே நீடித்தது. நேற்று நாள் முழுவதும் மழை பெய்ததால் பொதுமக்களிடையே வார விடுமுறை தின உற்சாகம் களை இழந்தது. அதிக வாகனப் போக்குவரத்துகளின்றி சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதுபோல மாவட்டத்தின் மற்றப்பகுதிகளான சிறுமலை, கொடைக்கானல், வத்தலகுண்டு, சின்னாளப்பட்டி, வேடசந்துார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. பழநியில் விடுமுறை நாளான நேற்று மதியம் உள்ள தொடர் மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி