மேலும் செய்திகள்
நத்தத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்
11-Sep-2026
ரூ. 3 லட்சத்துக்கு பாக்கு ஏலம்
22-Sep-2026
வத்தலக்குண்டு: வத்தலக்கண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனை கூட மேற்பார்வையாளர் கீதா தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.155-, கழிவு பருப்பு கிலோ ரூ.82- என, ஏலம் போனது. விற்பனைக் கூடத்திற்கு 1.16 குவிண்டால் கொப்பரை தேங்காய் வரப்பெற்றது. இவை அனைத்தும் ரூ.17 ஆயிரத்து 177- என, ஏலம் போனது. இளநிலை உதவியாளர் கண்ணன், மண்டி ஆய்வாளர் ராமலிங்கம், சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். வத்தலக்குண்டு விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறும்.
11-Sep-2026
22-Sep-2026