கொப்பரை தேங்காய் ஏலம்
கோபால்பட்டி: கோபால்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய், கொப்பரை, தேங்காய் தொட்டிக்கான ஏலம் நடந்தது. தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.161.50க்கும் குறைந்தபட்சமாக ரூ.151க்கும் ஏலம் போனது. 4007 கிலோ கொப்பரை வரப்பெற்றதில் ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 130க்கு ஏலம் போனது. மேற்பார்வையாளர் முகமதுயாசின், ஆய்வாளர் ராவணேஸ்வரன் ஏலத்தை நடத்தினர்.