மேலும் செய்திகள்
கிரிக்கெட் லீக்: சாமுராய் வெற்றி
23-May-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.கே.கே.ஆர்., நடராஜன் பார்வதி அம்மாள் கோப்பைக்கான 3 வது டிவிஷன், மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 டிவிஷன் போட்டிகள் பி.எஸ்.என்.ஏ.,, ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.திண்டுக்கல் லெவன் ஸ்டார் சிசி அணி 25 ஓவர்களில் 102/6. சங்கர்கணேஷ் 32, சூர்ஜ் 29(நாட்அவுட்), பாலமணிகண்டன் 3 விக்கெட். சேசிங் செய்த நத்தம் ஸ்கை சிசி அணி 9.3 ஓவர்களில் 107/1 எடுத்து வென்றது. ஜெயசூர்யா 46, மணிகண்டன் 41(நாட்அவுட்). நிலக்கோட்டை வாரியர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 183/5. கருப்பையா 48(நாட்அவுட்), அப்துல்லத்தீப் 41, பிரச்சன்னகுமார் 41(நாட்அவுட்), பூபதிராஜா 4 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் மன்சூர் சிசி அணி 21 ஓவர்களில் 184/5 எடுத்து வென்றது. பூபதிராஜா 71, பிரகாஷ் 5 விக்கெட்.திண்டுக்கல் மெஜஸ்டிக் சிசி அணி 25 ஓவர்களில் 138/7. பிரசாந்த் 4 விக்கெட். சேசிங் செய்த ஆல்ரவுண்டர்ஸ் சிசி 22.2 ஓவர்களில் 139/8 எடுத்து வென்றது. திருப்பதி 30 (நாட்அவுட்), பாஸ்கரன் 4, தனிஷ் 3 விக்கெட். திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 193/7. மோனிஷ்குமார் 56, முத்துகாமாட்சி 36. சேசிங் செய்த ஸ்கை சிசி அணி 25 ஓவர்களில் 194/7 எடுத்து வென்றது. மணிகண்டன் 60, பிரபாகரன் 38, ஜெயசூர்யா 27.திண்டுக்கல் ஏஞ்சல் கேஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 156/4. சரவணக்குமார் 42 (நாட்அவுட்), ரமேஷ் 33. சேசிங் செய்த லெவன் ஸ்டார் சிசி அணி 24 ஓவர்களில் 140க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. ஆனந்தகுமார் 37, சூரஜ் 35, அருண்குமார் 30, சரவணக்குமார் 4 விக்கெட்.
23-May-2025