உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனுமதியின்றி சோலை மரம் வெட்டி அகற்றம்

அனுமதியின்றி சோலை மரம் வெட்டி அகற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானல் பழைய நகராட்சி அலுவலக கட்டடத்தில் அனுமதியின்றி சோலை மரம் அகற்றப்பட்டது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிந்தனர். பிரிட்டிஷ் காலத்தில் கொடைக்கானல் அண்ணா சாலையில் நகராட்சி செயல்பட்டது. ஏரிச்சாலையில் புதிய அலுவலகம் கட்டப்பட்ட நிலையில் இக்கட்டடம் பயனற்று இருந்தது. நகராட்சி சில மாதங்களுக்கு முன் தனியாருக்கு குத்தகை விட்டது. இந்த அலுவல் வளாகத்தில் பலன் தரும் சோலை மரம் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இதில் விளையும் கொட்டாம்பழம் பறவையினம், பொதுமக்களுக்கு பலனளித்தது. நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி இந்த சோலை மரம் வெட்டி அகற்றப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து புகார் அளித்தனர். வனத்துறையினர் வெட்டப்பட்ட மரத்தை பார்வையிட்டு குத்தகைக்கு எடுத்த நபர் மீது மலைத்தள பாதுகாப்பு விதியில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ