உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பண்டிகை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

பண்டிகை நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவைக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருப்பூர், கோவை நகரங்களுக்கு மாணவ, மாணவிகள், ஐ.டி., ஊழியர்கள், மருத்துவமனை, பிற அலுவல்களுக்கு செல்வோர் திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தடங்களில் இருந்து வரும் பஸ்களில் பயணிக்கின்றனர். ஆனால் பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரம் வருவதற்கு முன்பே பஸ்களில் கூட்டம் அதிகமாகி விடுகிறது. இதனால் இங்கிருந்து பயணிப்போர் பஸ்களில் நின்று கொண்டு செல்லும் நிலை உள்ளது. கோவை – மதுரை பஸ்களில் இடைப்பட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகளை பஸ் புறப்படும்போது ஏறும்படி கூறி உட்கார அனுமதிப்பதில்லை. இதனால் பண்டிகை விடுமுறைக்கு கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் வரும் கல்லுாரி மாணவ, மாணவிகள், திருப்பூர் கம்பெனிகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தீபாவளி நேரத்தில் ஒட்டன்சத்திரம் பகுதி மக்கள் வெளியூர் செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் சிரமப்படும் நிலை இருந்தது. பண்டிகை நாட்களில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கோவை, திருப்பூருக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ