உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின்சாரம் தாக்கி தேவாங்கு பலி

மின்சாரம் தாக்கி தேவாங்கு பலி

வடமதுரை:வடமதுரையில் மின் டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் ஏறிய தேவாங்கு மின்சாரம் தாக்கி இறந்தது. வடமதுரை மகாலட்சுமி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 12:30 மணிக்கு டிரான்ஸ்பார்மரில் பலத்த சத்தத்துடன் மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. காலையில் சீரமைக்க மின் ஊழியர்கள் வந்தபோது தேவாங்கு மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தது தெரிந்தது. சீரமைப்பு பணி முடித்து மின்சப்ளை வழங்கப்பட்டது. இயற்கை ஆர்வலர் மகிடேஸ்வரன் கூறுகையில், 'அழிந்து வரும் அரியவகை பாலுாட்டி இனமான தேவாங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் முதன்முதலாக திண்டுக்கல், திருச்சி மாவட்ட பகுதிகளை இணைத்து கடவூர் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது. தேவாங்குகள் மரங்களின் வழியே தான் இடம் பெயரும். மரங்கள் இல்லாத இடங்களில் மட்டுமே தரைக்கு வரும். மின்கம்பங்களில் செடி, கொடி படர்ந்து வளருவதை தடுப்பதன் மூலம் தேவாங்கு பலியாவதை தடுக்க முடியும். அரசு கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை