உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு

 வளர்ச்சி பணி; கலெக்டர் ஆய்வு

நத்தம்: - நத்தம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து காந்திஜி பூங்கா பகுதியில் கட்டப்படும் அறிவுசார் மையத்தை பார்வையிட்ட கலெக்டர் நத்தம் போலீஸ் ஸ்டெஷனில் கோப்புகளை ஆய்வு செய்து சி.சி.டி.வி., கேமராக்களை பார்வையிட்டார். லிங்கவாடி- மலையூர் பகுதியில் அமைக்கப்படும் புதிய தார்சாலை பணிகளை பார்வையிட்டு மலை கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயல் அலுவலர் விஜயநாத், பி.டி.ஓ.,க்கள் ஜெயக்குமார், ரவீந்திரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை