மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
03-Mar-2025
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் விதவிதமான காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.பழநி முருகன் கோயிலுக்கு தினம்தோறும் பல்வேறு மாநிலங்கள் ,மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். நேற்று கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து வந்த பக்தர்கள் தொட்டில் காவடி எடுத்து வந்து அதில் குழந்தையை படி வழியாக துாக்கி வந்து தரிசனம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் இடைப்பாடி சேர்ந்த பக்தர்கள் மயில் தோகை அலகு குத்தி காவடி எடுத்து தரிசனம் செய்தனர்.
03-Mar-2025