பழநியில் குவிந்த பக்தர்கள்
பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.வின்ச் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தடையை மீறி பக்தர்கள் சிலர் அலைபேசிகளை கோயிலுக்கு எடுத்து வந்திருந்தனர். அதிகாரிகளும் அதை கண்டுகொள்ளவில்லை.