உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் கிரிக்கெட் லீக் ஆல்ரவுண்டர்ஸ் அணி சாம்பியன்

திண்டுக்கல்லில் கிரிக்கெட் லீக் ஆல்ரவுண்டர்ஸ் அணி சாம்பியன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஆல்ரவுண்டர்ஸ் சிசி அணி வென்றது. மது ஸ்கேன்ஸ் அண்ட் ஸ்பெஷாலிட்டி லேப் கோப்பைக்கான 4 வது டிவிஷன் போட்டிகள் பைரவர் மஹால், பி.எஸ்.என்.ஏ., மற்றும் ஆர்.வி.எஸ்., மைதானங்களில் நடந்தது. திண்டுக்கல் ஆல் ரவுண்டர்ஸ் சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 203/6. குணசேகரன் 66, திருப்பதி 40(நாட்அவுட்), வைரமுத்து 36. சேசிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 14.5 ஓவர்களில் 63 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. பாக்கியராஜ் 6 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் லெவன் ஸ்டார் சிசி அணி 25 ஓவர்களில் 176/9. ஆனந்தகுமார் 54, அருண்குமார் 42, ஜெய்விக்னேஷ் 5 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 144/8 எடுத்து தோற்றது. திண்டுக்கல் ஸ்கை சிசி அணி முதலில் பேட்டிங் செய்து 25 ஓவர்களில் 182/6 ரஞ்சித் 56(நாட்அவுட்), மணிகண்டன் 45, சூர்யா 43. சேசிங் செய்த கொடைக்கானல் லெவன் அணி 22.5 ஓவர்களில் 124 க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. தினேஷ்குமார் 31, முகமதுயாசின், பாலமணிகண்டன் தலா 3 விக்கெட். முதலில் பேட்டிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 183/9. தினேஷ்கார்த்திக் 76, பாலமுருகன் 54, முகமதுயாசின் 5 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் ஸ்கை சிசி 23.4 ஓவர்களில் 188/5 எடுத்து வென்றது. பிரபாகரன் 34, சந்திரன் 32(நாட்அவுட்), பிரபாகரன் 34. கொடைக்கானல் லெவன் அணி முதலில் பேட்டிங் செய்து 22.5 ஓவர்களில் 126 க்கு ஆல்அவுட் ஆனது. கார்த்திக் 40, அப்துல்சலாம் 5 விக்கெட். சேசிங் செய்த கொடைக்கானல் யங்ஸ்டர்ஸ் சிசி 231. ஓவர்களில் 129/4 எடுத்து வென்றது. கவுதம்பாபு 61(நாட்அவுட்).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை